இலங்கை

சீனாவில் இருந்து உரத்தைக் கொண்டுவருவது குறித்து கலந்துரையாடல்!

சீனாவிலிருந்து உரத்தை மீண்டும் கொண்டுவருவது தொடர்பான கலந்துரையாடல், உரச் செயலகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ளது.

அதன்படி, குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் அறிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எதிர்வரும் மார்ச் மாதம் சீன உரத்தை ஏற்றிய கப்பலை நாட்டுக்குக்கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

குறித்த கப்பலில் 8 ஆயிரம் மெற்றிக் டன் உரம் கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அதிகளவு பணம் அச்சிடப்பட்டுள்ளதால் பணவீக்கம் அதிகரித்துள்ளது: மத்திய வங்கியின் புதிய ஆளுநர்

Thanksha Kunarasa

றம்புக்கணை துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உத்தரவிட்ட அமைச்சர்கள்! நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்

Thanksha Kunarasa

கொழும்பு சென்ற தொடருந்து மோதி யுவதி ஒருவர் பலி!!

namathufm

Leave a Comment