உலகம்

கொரோனா நீண்ட காலப் பிரச்சனையாக இருக்காது – அமெரிக்க ஜனாதிபதி!

கொரோனா வைரஸ் அமெரிக்கர்களுக்கு நீண்ட காலப் பிரச்சனையாக இருக்காது என, தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாகவே, அமெரிக்காவில் தற்போது அதிகளவான பாடசாலைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொற்று பரிசோதனை மற்றும் கட்டாய தடுப்பூசி தொடர்பாக அமெரிக்க அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில், ஜோ பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

ரஷ்யாவுக்கு விளையாட்டு, சுவீடனுக்கு சீவன் போகுது !

namathufm

ஜெருசலேமில் அல்- அக்ஸா மசூதியில் பயங்கர மோதல்- பலர் படுகாயம்

Thanksha Kunarasa

போதைப்பொருள் கடத்தல்காரர் காதலியால் கைதானார்

Thanksha Kunarasa

Leave a Comment